மூக்கையாத் தேவர் நினைவு அறக்கட்டளை துவங்கிய வரலாறு

Founders

அருண் சி பரத் IRS
9884575245
சென்னை
Founders

ம. இளங்கோவன் BE
9443145929
மதுரை
Founders

காசி மாயன் IRD
 
Founders

அன்பு கிறிஸ்டியன் MA
9976486440
திண்டுக்கல் - 624005

உசிலம்பட்டி பகுதி மதுரை மாவட்டத்தின் மிகவும் வறண்ட பகுதியில் ஒன்றாகும். இங்கு பிரமலைக்கள்ளர்கள், முக்குலத்தோரின் மற்ற பிரிவினர், பட்டியல் இனத்தவர்கள் என பல்வேறு சமூக மக்கள் இசைவுடன் வாழ்ந்து வருகின்றனர். இவர்களது முக்கிய தொழில் வேளாண்மையாகும். இங்கு வாழும் பெரும்பான்மை சமூகமான பிரமலைக்கள்ளர்கள் வேளாண்மையுடன் காவல் தொழிலும் பார்த்து வந்தனர்.

இவ்வகையில் ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் அவர்களுக்கு சவாலாக விளங்கினர். பிரமலைக்கள்ளர்களது ஆதிக்கத்தை ஒடுக்கும் நோக்கத்துடன் இவர்கள் மீது குற்றப்பரம்பரைச் சட்டத்தை பிரயோகித்து பல கொடுமைகளுக்கு இலக்காக்கியது இச்சட்டம் 1914ல் நடைமுறைக்கு வந்து இந்திய விடுதலைக்குப் பின் திரு.பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், திரு.பி.கே.மூக்கையாத்தேவர், தோழர் P.ராமமூர்த்தி, தோழர் கே.டி.கே.தங்கமணி, தோழர் ஜீவானந்தம் மற்றும் நவீன நந்தனார் என்று போற்றப்படட திரு முனுசாமி ஆகியோரது தீவிர எதிர்ப்பால் 1947 ஜீலையில் திரும்ப பெறப்பட்டது. சுமார் 50 ஆண்டுகள் பிரமலைக்கள்ளர்களுடன் சீர்மரபினர்களும் பாதிக்கப்பட்டனர். அதே வேலையில் இப்பகுதி முன்னேற்றமும் ஏனைய பகுதிகளை விட பெரிதும் பின் தங்கியது.

இம்மக்களை மேம்படுத்த வேண்டுமென்ற நோக்கில் ஆங்கில ஏகாதிபத்திய காலத்திலேயே பள்ளிகள் ஏற்படுத்தப்பட்டது. மாவட்ட காவல் அதிகாரியாக பணியாற்றிய திரு. இ.பி.லவ்லக் மற்றும் திரு.ஏ.கே.ராஜா அய்யர், பாதிரியார், ஹிமல் ஸ்டாண்ட் அய்யர், லார்பியர் போன்றோர் இம்மக்களின் கல்விபணிக்குப் பாடுபட்டவர்கள்.

இவர்களின் சேவை பள்ளி அளவில் மட்டும் நின்றது. பட்டபடிப்பு மற்றும் உயர்கல்விக்குச் சென்றவர்கள் மிகக் குறைவு. எனவே இப்பகுதி மக்களது பங்கு ஆசிரியர் பணி தவிர பிற அரசுப் பணிகளில் இந்திய விடுதலை வரை இல்லை என்றே சொல்லலாம். இந்திய விடுதலைக்கு பின்னும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. இதற்கு காரணம் மேல் படிப்புக்குச் செல்ல இம்மக்களிடம் வகையும், வாய்ப்பும் வழிகாட்டலும் இல்லை. நீண்ட காலம் தனிமைப்படுத்தப்பட்ட மக்களால் பிற சமூகங்களுடன் சகஜ நிலை ஏற்படுத்த சுமார் 50 ஆண்டுகள் ஆயிற்று என்றால் குற்றப்பரம்பரைச் சட்டத்தின் கொடுமையை என்னவென்று சொல்வது.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் தீவிர தேச பக்த நெறிகளால் ஈர்க்கப்பட்ட உசிலை மண்ணின் மைந்தர் திரு. P.K. மூக்கையாத்தேவர் அவர்கள் இப்பகுதியின் தலைவராக உருவெடுத்தார்.

பாப்பாபட்டி திரு.பி.கே.மூக்கையாத்தேவர் அவர்கள் ஏழைக்குடும்பத்தில் பிறந்து படித்து சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு 30 வருடங்களாக மக்கள் செல்வாக்கிலும், அரசியல் செல்வாக்கிலும் சிறந்து விளங்கினார். பட்டப்படிப்புப் படிக்க இந்த பகுதி இளைஞர்கள் ஆர்வப்பட்டனர் படிப்பது என்ன? எங்கே படிப்பது? என அறியாது மூக்கையாத் தேவரிடமே சென்றனர்.

தான் இளைஞராய் இருக்கும்போது கல்லூரியில் சேர பட்ட துன்பங்களை நினைத்து, இந்தப் பகுதி இளைஞர்களுக்கு மதுரையில் உள்ள பல கல்லூரிகளில் தன் செல்வாக்கினால் பெற்றுத் தந்தார் மதிப்பெண் குறைவாக பெற்ற மாணவர்களின் கல்லூரிகளில் சேர்க்க மிகவும் சிரமப்பட்டார்.

இந்த சூழ்நிலையை உணர்ந்து பல்வேறு மக்கள் கூறிய ஆலோசனைகளை மனதில் வைத்து நாமே சுயமாக கல்லூரி ஆரம்பிக்க வேண்டுமென முயற்சி செய்தார்.

அப்போது இந்தப் பகுதியைச் சேர்ந்த பகுதியின் முதல் IAS அதிகாரியான வி.கே.சி. நடராஜன் அவர்கள் மற்றும் நமது சமுதாய பெரியவர்களும் ஆலோசனை செய்து, ஏற்கனவே சேமிக்கப்பட்ட கள்ளர் காமன்பண்டு நிதி ஆதாரத்துடன் மக்களிடம் நிதி ஆதாரமும் பெற்று கள்ளர் கல்வி கழகம் 3.12.1967ல் உருவான இந்நிதி ஆதாரத்தின் மூலம் 05.07.1968ல் மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டியிலும், நன்கொடைகள் மூலம் கமுதியிலும் திருநெல்வேலி மாவட்டத்தில் மேலநீலிதநல்லூரிலும், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரில் மூன்று கல்லூரிகளை துவக்கினார்.

முன்நாளில் மாணவர்களை கல்லூரிகளில் சேர்க்கப் பாடுபட்ட நினைவெல்லாம் சேர்த்து நமது கல்லூரியில் பட்டப்படிப்புப் படிக்க விண்ணப்பத்தவர்களில் மிகக்குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கு முதலிடம் தரப்பட வேண்டுமென ஒரு சலுகை புரட்சியை ஏற்படுத்தினார்.

எல்லா வகையிலும் உசிலம்பட்டி பகுதி மக்களுக்காக தன்னை அர்பணித்துக் கொண்ட கல்விக்காவலர், கல்லூரி நிறுவனர் சாதி, மதம் கடந்த சமதர்மவாதி சமூக சேவகர் அமரர் பி.கே.மூக்கையாத் தேவர் நினைவாக, அவரது பெயரில் இந்த அமைப்பை தொடங்குவது என முடிவு செய்யப்பட்டது அவ்வாறே இவ்வமைப்பு பி.கே.எம். இளைஞர் மேம்பாட்டு அறக்கட்டளை என பெயரிடப்பட்டது.

தான் இளைஞராய் இருக்கும்போது கல்லூரியில் சேர பட்ட துன்பங்களை நினைத்து, இந்தப் பகுதி இளைஞர்களுக்கு மதுரையில் உள்ள பல கல்லூரிகளில் தன் செல்வாக்கினால் பெற்றுத் தந்தார் மதிப்பெண் குறைவாக பெற்ற மாணவர்களின் கல்லூரிகளில் சேர்க்க மிகவும் சிரமப்பட்டார்.

நோக்கமும், கொள்கைகளும்

  1. வேலைவாய்ப்பிற்கான மத்திய, மாநில அரசு பணித் தேர்வுகளில் வெற்றி பெற தரமான இலவச பயிற்சியளிப்பது.
  2. சாதி, மத, இன, நிற பால் வேறுபாடின்றி மிகவும் பின்தங்கியுள்ள ஆண், பெண் இருபால் மாணவர்கள் பயன்பெறும் வகையில் கல்வியும், பயிற்சியும் இலவசமாகக் கொடுப்பது.
  3. TNPSC அரசு பணி பயிற்சிகளை வழங்குவது.
  4. ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். போன்ற உயர் படிப்புகளுக்கு வழிகாட்டுவது.
  5. ஆங்கில மொழித் திறனை வளர்க்க ஆங்கில வகுப்புகள் நடத்துவது. பதிவு செய்து முறைப்படுத்தப்பட்டது இந்த அமைப்பு.

இந்த அமைப்புக்குழு தற்காலிக தலைவராக பேராசிரியர் பொன். சூரியராஜ் அவர்களும், செயலராக பேரறிஞர் ம.இளங்கோவன் அவர்களும், பொருளாளராக திரு.அன்பு கிறிஸ்தியான் அவர்களும் நியமிக்கப்பட்டனர். இத்துடன் 8 செயற்குழு உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டனர்.

சாதனைகள்

கடந்த 4 ஆண்டுகளில் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. சுமார் பேருக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. சுமார் 142 பேர் தேர்ச்சி பெற்று பணியில் அமர்ந்துள்ளனர்.

தேர்ந்த ஆசிரியர்கள் மூலம் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றது. போதுமான அளவுக்கு தேர்வுகள் நடத்தி பயிற்சியாளர்கள் பண்படுத்தப்பட்டு ஆயத்தம் செய்யப்படுகின்றனர்.

இச்சாதனைகள் தொடர வேண்டுமெனில் பகுதியின் நலனில் அக்கரை கொண்டவர்கள் தங்களால் ஆன நிதி வழங்கி அமைப்பு சிறக்க வேண்டுகிறோம்.

Vision: அரசு வேலைவாய்ப்பு
இளைஞர்களின் வளர்ச்சிக்கு பாடுபட்ட மூக்கையாத்தேவர் முயற்சியால் மாணவர்கள் சிறப்பான வெற்றியைப் பெற்று உலக நாடுகள் அனைத்திலும் பணி செய்கின்றனர். இது அவரது முயற்சிக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.

பள்ளிப்படிப்பு, பட்டப்படிப்பு முடித்த நம்பகுதி இளைஞர்கள் வேலையில்லாது கஷ்டப்படுவதை உணர்ந்த இந்தப்பகுதி பெரியவர்கள் படித்த இளைஞர்கள் நிலை உயர பிறபணிகளுடன் அரசுப்பணியும் அவசியம் என உணர்ந்தனர். வேலை வாய்ப்பை பெற TNPSC, காவல்துறை, வங்கி, ரயில்வே சார்ந்த அரசுப் பணித் தேர்வுகளுக்கும் பயிற்சி அளிப்பது என்ற வகையில் இந்த கருத்துருவை மையமாக வைத்து நம் பகுதியில் பற்றுக் கொண்ட சிந்தனையாளர்கள் திரு.ளு.இராஜேந்திரன் ஐ.ஏ.எஸ். திரு.அருண் சி பரத் IRS திரு.காசிமாயன் IAS போன்றவர்களுடன் கலந்து பேசி அன்புகிறிஸ்தியான், பேரா.திரு.பொன் சூரியராஜ், பொறிஞர். ம.இளங்கோவன், தலைமையாசிரியர் எம்.சின்னக்கண்ணன், ஐ.ராஜா, எஸ்.ஜெயச்சந்திரன், ஜெயராமன், டாக்டர் பாரதி, டாக்டர் சங்கீதா மற்றும் பிரசிடென்சி சர்வீஸ் கிளப் பொறுப்பாளர்கள் கூடி ஒரு புதிய அமைப்பை உண்டாக்கினர்.

எல்லா வகையிலும் உசிலம்பட்டி பகுதி மக்களுக்காக தன்னை அர்பணித்துக் கொண்ட கல்விக்காவலர், கல்லூரி நிறுவனர் சாதி, மதம் கடந்த சமதர்மவாதி சமூக சேவகர் அமரர் பி.கே.மூக்கையாத் தேவர் நினைவாக, அவரது பெயரில் இந்த அமைப்பை தொடங்குவது என முடிவு செய்யப்பட்டது அவ்வாறே இவ்வமைப்பு பி.கே.எம். இளைஞர் மேம்பாட்டு அறக்கட்டளை என பெயரிடப்பட்டது.

இயக்குநர் இமையம் பாரதிராஜா அவர்கள் தலைமையில் 06.03.2010ஆம் ஆண்டு உசிலம்பட்டியில் துவக்க விழா நடைபெற்றது.

கீழ்க்கண்டவர்கள் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்.

  1. திரு.C.துரைராஜ், முன்னாள் அமைச்சர் அவர்கள்
  2. திரு.இ.மகேந்திரன், Ex.M.L.A அவர்கள்
  3. திரு.A.K.போஸ் அவர்கள், M.L.A
  4. திரு.K.தவசி, Ex.M.L.A அவர்கள்
  5. திரு.ஜெயராஜ், சேர்மன், SBM பொறியில் கல்லூரி, திண்டுக்கல்.
  6. திரு.உதயம், மு.ராஜேந்திரன், தலைவர், பிரசிடென்சி சர்வீஸ் கிளப், மதுரை
  7. திரு.பேரா. பொன்.விஜயன், முன்னாள் பொதுச் செயலாளர் பிரசிடென்சி சர்வீஸ் கிளப், மதுரை.
  8. திரு.புலவர் சின்னன் அய்யா அவர்கள்,
  9. திரு.சு.சுந்தரவந்தியத்தேவன் ஆய்வாளர் (பிரமலைக்கள்ளர் வாழ்வும், வரலாறும்)

நமது அறக்கட்டளைக்கு சென்னை மனிதநேய அறக்கட்டளை நிறுவன மதிப்புமிகு சைதை.துரைசாமி அவர்களின் ஆலோசனையின் உதவியும் வழங்கி வருகிறார்.

தொடக்க காலத்தில் வாடகை கட்டிடத்தில் நடைபெற்றது. அரசு மாணவர் பள்ளியின் பெற்றோர்-ஆசிரியர் பொறுப்பாளர்களில் ஒருவரான ஐ.இராசா, பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆகியோர்களின் பெரும் முயற்சியால் பெற்றோர் ஆசிரியர் கழகத்துடன் இணைந்து பழைய பள்ளி வளாகத்தில் பயனின்றி உள்ள வகுப்பறையை பெற்றுத்தந்தனர்.

வழிநடத்துபவர்கள்

பயிற்சிகள் நடைமுறைப்படுத்திட பிரமலைக்கள்ளர் மாநிலச் செயலாளர் திரு.எஸ்.ஜெயச்சந்திரன், முன்னாள் மேல்நிலைப்பள்ளி, தலைமை ஆசிரியர் திரு.எம்.சின்னக்கண்ணன், கள்ளர் மேல்நிலைப்பள்ளி, தலைமை ஆசிரியர் திரு.பி.தன்ராஜ், தலைமை ஆசிரியர் டி.ஜெயபால், தேவநேசன், ஐ.ராஜா ஆகியவர்கள் ஒருங்கிணைப்பாளராக இருந்து பணிசிறக்கப் பாடுபடுகின்றனர்.